Breaking News

ஸ்ரீநட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலுக்கு இரு திருக்குடைகள் வழங்கினார் விஜயேந்திரர்...

காஞ்சிபுரம்,செப்.4-

காஞ்சிபுரம் அருகே உக்கம்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகருக்கு வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இரு திருக்குடைகளை ஞாயிற்றுக்கிழமை காணிக்கையாக வழங்கினார்.

படவிளக்கம்.. ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் மணி மண்டப வளாகத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட இரு திருக்குடைகள்

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில். காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இரு திருக்குடைகளை நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயிலின் தலைவர் சுவாமி நாத ஐயர்,செயலாளர் பாண்டுரெங்கன்,கோயில் ஆலோசகர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரிடம் வழங்கினார். 

ஓரிக்கை மகா பெரியவர் மணிமண்டபத்தில் நடந்த திருக்குடைகள் வழங்கும் விழாவில் காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் என்.சுந்தரேச ஐயர்,ஸ்ரீகாரியம் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி,ஒரிக்கை மணி மண்டபத்தின் நிர்வாக அறங்காவலர் என்.மணி ஐயர் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக இரு திருக்குடைகளும் மங்கள மேள வாத்தியங்களுடன் மணிமண்டப சுற்றுப்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

✒ செய்தியாளர் E. ஜாபர்

No comments

Thank you for your comments