அண்ணாத்த படம் ரஜினி பைக்கின் நம்பர் பிளேட்... வேற லெவல்... கொண்டாடும் ரசிகர்கள்...
ரஜினி வசனத்துடன் கூடிய 'அண்ணாத்த' படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்தும் இரு சக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டில் உள்ள எண் குறித்த விளக்கத்தை ரசிகர்கள் வேற லெவல் என வைரலாக்கி சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இன்று (செப்டம்பர் 10) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 11 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியாகும் என அறிவித்தது படக்குழு.
அதன்படி சன் டிவியின் யூடியூப் பக்கத்தில் 'அண்ணாத்த' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனை ரஜினி பேசும் "நாடி நரம்பு முறுக்க முறுக்க... ரத்தம் மொத்தம் கொதிக்க கொதிக்க.. அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க.. தொடங்குது ஓங்கார கூத்து.." என்ற வசனத்துடன் வடிவமைத்துள்ளார்கள்.
இந்த மோஷன் போஸ்டரில் ரஜினியின் குரல் ஒலிக்கிறது. தலையில் ஹெல்மெட், காதில் ஹெட் போனுடன் முகத்தில் கடுங்கோபத்தில் புல்லட்டில் பயணிக்கிறார்.
அந்தப் போஸ்டரில் ரஜினி அமர்ந்துள்ள புல்லட் வண்டியின் நம்பர் WB 03 SS 1212 என்று இருந்தது.
அவர் பயன்படுத்தும் புல்லட் வண்டியின் நம்பர் குறித்த விளக்கத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
"WB" என்றால் World Box Office King என்றும்
"03" என்றால் 3 தலைமுறையினரையும் கவர்ந்தவர் என்றும்
"SS" என்றால் 'SUPER STAR' என்றும்
"1212" என்பது அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ஐ (அதாவது 12 மாதம் 12ம் தேதி) குறிக்கிறது எனவும் குறிப்பிட்டுக் கொண்டாடி வருகிறார்கள்.
ரஜினி நடித்த படங்களில் பெரும்பாலானவை பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்தவை என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அது போல் அன்று 1980களில் அப்பாவோ அல்லது அம்மாவோ ரஜினி ரசிகராக இருந்திருப்பர். அவரது மகனோ, மகளோ சூப்பர் ஸ்டாரின் ரசிகராக இருந்திருக்கிறார்கள். இன்று அவர்களுடைய குழந்தைகளும் ரஜினி ரசிகர்களாக உள்ளனர். இதைத்தான் 3 தலைமுறையினரை கவர்ந்த தலைவர் என்கிறார்கள்.
இது போல் ஒவ்வொரு நடிகர்களின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்களில் இடம்பெறும் விஷயங்களை குறிப்பிட்டு அவரவர் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள். கடந்த முறை பேட்டை படத்தில் அவர் பயன்படுத்திய கார் மற்றும் அவருடன் இருந்த நாய் ஆகியவை பிரபலம் அடைந்தன.
அது போல் தர்பாரில் அவரது பெயரான ஆதித்யா அருணாச்சலம், இயக்குநர் ஏஆர் முருகதாஸுடன் தொடர்புடையது. ஆதித்யா என்பது அவரது மகன், அருணாச்சலம் அவருடைய தந்தை பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments