Breaking News

50லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்க கோரி... பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை

தமிழ்நாட்டிற்கு அக்டோபர் 31ஆம் தேதிக்குள் மேலும் 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் நேற்று (19-9-2021) நடபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் நேற்று இரவு வரை 16,43 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேலும் கொரோனா தடுப்பூசி தேவை என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசிகள் அதிகளவில் போடப்பட்டுவரும் நிலையில், அக்டோபர் 31 ஆம் தேதிக்கு முன்பாக தகுதியுள்ள அனைவருக்கும் இத்தடுப்பூசிகளைப் போடுவதற்காக வாரம்தோறும்  50 இலட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டுமென்று கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று கடிதம் எழுதியுள்ளார்.


No comments

Thank you for your comments