Breaking News

PPG ஏசியன் பெயிண்ட் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து வேலை நிறுத்தம் போராட்டம்

ஶ்ரீபெரும்புதூர்:

ஶ்ரீபெரும்புதூர் அருகே கார்களுக்கு பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை தொழிலாளர் சங்கம் காழ்புணர்சி காரணமாக 6 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்த தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்கா சத்திரம் அருகே மாம்பாக்கம் பகுதி இயங்கி வரும் PPG ஏசியன் பெயிண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் ஹூண்டாய், நிசான், ஃபோர்ட், எம் சி உள்ளிட்ட பல தொழிற்சாலைகளுக்கு காருக்கு அடிக்கப்படும் வண்ணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 


இந்த தொழிற்சாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பணியாற்றும் 6 தொழிலாளர்களை கடந்த வாரம் தொழிற்சங்கம் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொழிற்சங்க முக்கிய நிர்வாகிகளை எந்த ஒரு அறிவிப்பும் இன்றி தொழிலாளர்களை தொழிற்சாலை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.


கடந்த 6 ஆம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்ட 6 தொழிலாளர்களை மீண்டும் பணி செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என கோரி நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உற்பத்தியை நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதுவரை தொழிற்சாலை நிர்வாகமோ அல்லது தொழிலாளர் நல வாரியமோ பேச்சுவார்த்தைக்கு ஈடுபட வில்லை. 

இந்நிலையில், கடந்த ஆறாம் தேதி முதல் உற்பத்தியை நிறுத்தி, தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.

No comments

Thank you for your comments