சாலையோர புளியமரம் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பசுமைய புளியமரம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், வரிசையாக நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளியமரங்கள் உள்ளது.
என்.நாரையூர் அருகே, நெடுஞ்சாலையோர புளியமரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இது குறித்து தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மரத்தில் எரிந்த தீயை அனைத்தனர்.
இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

No comments
Thank you for your comments