உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பதவி- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக எம்எல்ஏக்கள் ஈஸ்வரன், கணேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ சிந்தனைச் செல்வனும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கோவை பாரதியார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக எம்எல்ஏக்கள் ஈஸ்வரன், கணேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கதில் நன்றி கூறி பதிவிட்டுள்ளார்... அவர் பதிவிட்டதாவது,
கல்வித்தளத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக திகழ்வது அண்ணா பல்கலைக்கழகம். அதன் அலுவல் சாரா ஆட்சிமன்றக்குழு உறுப்பினராக பணியாற்றும் வாய்ப்பினை வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களுக்கும் - அறிவிப்பை வெளியிட்ட பேரவைத்தலைவர் அண்ணன் M Appavu அவர்களுக்கும் என் நன்றி.
இவ்வாறு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
No comments
Thank you for your comments