Breaking News

காஞ்சிபுரத்தில் சமையல் காண்ட்ராக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளை... போலீஸ் தீவிர விசாரணை

காஞ்சிபுரம், செப்.15:

காஞ்சிபுரம், வானவில் நகரில் சமையல் காண்ட்ராக்டர் வீட்டில் 20 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ரூ.2 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள வானவில் நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். நேற்று முன்தினம் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். 

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு முன்பக்க கதவு திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த ரூ. 2 லட்சம் ரொக்கம், 20 சவரன் தங்க நகை, வெள்ளித் தட்டு, இருசக்கர வாகனம் திருடப்பட்டுள்ளதாக கோபாலகிருஷ்ணன் காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். 

No comments

Thank you for your comments