வரதட்சணை கொடுமை.... இளம் பெண் தற்கொலையா...? கொலையா...?
காட்பாடி
காட்பாடி வெள்ளக்கல் பகுதியை சேர்ந்த செல்வம்-கோமதி அவர்களின் மகன் நவீன் குமார் (டிரைவர்) என்பருக்கும், கரிகிரி லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்-ராதா அவர்களின் மகள் யுவராணி(வயசு 22) என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணமானது.
இவருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. 19 சவரன் நகை மற்றும் ரொக்கப்பணமாக ரூபாய் 85 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை (யுவராஜ் ) உள்ளது.
இந்நிலையில், மறுபடியும் 15 சவரன் நகை வாங்கிக்கொண்டு வா என்று கணவர் மற்றும் குடும்பத்தினர் யுவராணியை மிரட்டி உள்ளார்கள். அவர் மறுக்கவே அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
இந்நிலையில், மனம் தாங்க முடியாமல் புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தகவல் 23/09/2019 பகல் 3:30 மணிக்கு பெண் வீட்டாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உடனே விரைந்து சென்று பார்த்தபோது பெண் இறந்த நிலையில் கண்டனர்.
துக்கம் தாளாமல், பெண் வீட்டார் சந்தேகத்தின் பேரில் உடனே காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி தலைமையில், காட்பாடி காவல் ஆய்வாளர் ஆனந்தன் முன்னிலையில் காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் ஏழுமலை மற்றும் போலீசார் விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கை வேலூர் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவர் குடும்பம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.. மேலும், இது தற்கொலையா அல்லது கொலை என்ற சந்தேகம் பெண் வீட்டாருக்கு எழுந்துள்ளது...
இந்நிலையில், காவல்துறையினரை பணத்தால் சரிகட்ட பார்ப்பதாக பெண் வீட்டார் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது..
பெண் வீட்டாரையும் நவீன் குமார் மிரட்டி உள்ளார். உங்க பொண்ணு இறந்துட்டா அதுக்கு என்ன இப்போ... வழக்கு என்று எதுவும் போகக்கூடாது என்று ஒன்றரை வயதில் உள்ள பேரக் குழந்தை யுவராஜ் காண்பித்து மிரட்டி உள்ளார்.
ஆர்டிஓ விசாரணையில் தங்கள் மகள் மரணத்துக்கு ஞாயம் கிடைக்க வேண்டும்.. என்று பெண் வீட்டார் கதறுகின்றனர்.


No comments
Thank you for your comments