ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு 82 ரவுடிகள் மீது அதிரடி நடவடிக்கை
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு 82 ரவுடிகள் மீது அதிரடி நடவடிக்கை...
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டார்.
இதனடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகள் மீது தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட சுமார் 210 ரவுடிகள் வீடுகளை சோதனை செய்ததில், 8 கத்திகள் மற்றும் ஒரு இரும்பு ராடு கைப்பற்றப்பட்டது.
அவர்களில் 82 ரவுடிகளை பிடித்து விசாரணை மேற்கொண்டு அவர்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 14 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்குட்படுத்தப்பட்டும், பிரிவு 110 கு.வி.மு.ச- ன்படி சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் அவர்கள் பரிந்துரையின்பேரில் வருவாய் கோட்டாட்சியர்கள் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியோர்கள் 64 ரவுடிகளை ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
மேலும் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த 4 ரவுடிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் எதிரிகளை ஓராண்டு தடுப்புக்காவலில் (GOONDAS ) வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments
Thank you for your comments