Breaking News

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார், ஆட்டோ மோதி விபத்து

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்  ஷேர் ஆட்டோ மீது அதி வேகமாக வந்த கார் மோதி விபத்து... ஷேர் ஆட்டோவில் சென்ற 4பெண்கள் உட்பட 7 பேர் படுகாயம்.

காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தாமல்  நோக்கி சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது பாலுசெட்டி சத்திரம் அருகே சென்னையிலிருந்து அதி வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக ஷேர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 4 பெண்கள் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பாலுசெட்டி சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் அருகே திடீரென ஏற்பட்ட இந்த விபத்தின் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

No comments

Thank you for your comments