Breaking News

அண்ணா சிலைக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் மாலை அணிவித்து மரியாதை

விருத்தாசலம்:

அண்ணா 113 –வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவச் சிலைக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஸ்டேட் பாங்க் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா 113-வது பிறந்தநாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து   அவருடைய திருவுருவச் சிலைக்கு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . கொடியேற்றி பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் தண்டபாணி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அருள்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன்.கணேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், வழக்கறிஞர் சரவணன், ஆசிரியர் பக்கிரிசாமி, நகர துணை செயலாளர் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் நம்பிராஜன், மாவட்ட பிரதிநிதி ஆட்டோ பாண்டியன், நகர திமுக வானவில் அன்சர்அலி,  நகர இளைஞரணி மார்க்கெட் பிரபு, முன்னாள் கவுன்சிலர் கர்ணன்,  வட்ட செயலாளர் கணேசன், இளைஞரணி துணைச் செயலாளர் குமார், தளபதி, நகர இளைஞர் அணி உதயன், நகர திமுக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments