பத்திரிக்கைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு... சொல்வது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..
சென்னை:
ஜனநாயகத்தினை தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளதுள்ளார்.
நாட்டின் நான்கு தூண்களாக சட்டம் இயற்றுதல், நீதித் துறை, நிர்வாகத் துறை, பத்திரிக்கைத்துறை உள்ளன. பத்திரிகை நாட்டின் நான்காவது தூண் என்று அழைக்கப்படுகிறது.
நாட்டின் மிக உயரிய பதவியான பிரதமர் பதவியில் இருப்பவர்களையும் கேள்வி கேட்கும் ஒரு ஜனநாயகத் தூணாக பத்திரிக்கைத்துறை இருந்துவருகிறது.
அதிகாரங்களை நோக்கி கேள்வி எழுப்புவதாலேயே பலமுறை அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் ஒருதுறையாகும்.
தமிழ்நாட்டு ஊடகங்களும் பலமுறை அரசியல் கட்சித் தலைவர்களின் கடும் விமர்சனங்களுக்கும், அவதூறுகளுக்கும் உள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
நேற்று, ருத்ர தாண்டவம் படத்தின் ப்ரிவியூ ஷோ பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா,
‘ஊடகவியலாளர்களை மிகக் கடுமையாக கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சனம் செய்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஊடகவியலாளர்கள் பலரும் ஹெச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்தநிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
‘ஜனநாயகத்தினை தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு.
நல்லவற்றை எடுத்துரைத்து அல்லவற்றை கண்டித்து சுட்டிக்காட்டும் உற்சாகப்படுத்தும் உணர்வூட்டும் பாராட்டும் வழங்கி, மக்களின் மனக் கண்ணாடியாக ஊடகமும் பத்திரிக்கைகளும் திகழ்கின்றன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியில் பத்திரிக்கைகளின் பங்கு இன்றியமையாதது.
அந்த அக்கறையும் ஆதரவும் பாரதிய ஜனதா கட்சிக்கு தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.
ஜனநாயகத்தை தரங்கும் தூண்கள் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள்
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) September 28, 2021
ஜனநாயகத்தை தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு ..
- மாநில தலைவர் திரு.@annamalai_k #KAnnamalai pic.twitter.com/wi0ZbonBLF
ஜனநாயகத்தின் தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு.நல்லவற்றை எடுத்துரைத்துஅல்லவற்றை கண்டித்துசுட்டிக்காட்டும் உற்சாகப்படுத்தும் உணர்வூட்டும் பாராட்டும் வழங்கி,1/3— K.Annamalai (@annamalai_k) September 28, 2021
தமிழகத்தில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறது.நன்றி… வணக்கம்!3/3— K.Annamalai (@annamalai_k) September 28, 2021

No comments
Thank you for your comments