Breaking News

மின் பழுது சரி செய்ய டிரான்ஸ்பார்மரில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு...

ஆம்பூர், செப்.28 -

திருப்பத்தூர் மாவட்டம்  வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் மின் பழுது சரி செய்ய டிரான்ஸ்பார்மரில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.  இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினர்.

வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் அதே பகுதியில் உள்ள ரைஸ் மில்லில்  பணிபுரிந்து வருகிறார்.


 

இவர் குடியிருக்கும் பகுதியில் மின் இணைப்பு தடைப்பட்டதால் மின் ஊழியர்களை எதிர்பார்க்காமல் விக்னேஷ்வரனே சரி செய்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை முதல் மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தன. மின்சாரமின்றி கிராம மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டுள்ளனர். 

இதனையறிந்த விக்னேஷ், அதனை சரி செய்ய மின் ஊழியர்கள் யாரும் வராத காரணத்தால், விக்னேஷ் மின் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின் இணைப்பை சரி செய்து கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில்  மின் டிரான்ஸ்பார்மரில் தொங்கிய நிலையில் விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்த கிராம மக்கள்  வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் மற்றும் ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விக்னேஷ்  சடலத்தை மின்  டிரான்ஸ்பார்மரிலிருந்து  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 இதனால் அந்த கிராமப் பகுதி மக்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினர்.

No comments

Thank you for your comments