34 இடங்களில் திடீர் வாகன சோதனை
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 34 இடங்களில் திடீர் வாகன சோதனை செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் அவர்களின் உத்தரவின்பேரில் இன்று ( 28.09.2021 ) “ DISARMS OPERATION ” என்ற பெயரில் திடீர் வாகனசோதனையானது மாவட்டம் முழுவதும் சுமார் 34 இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாகனச் சோதனையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக களஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாகனச் சோதனையின் போது வாகனஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமீறல் குறித்து அறிவுறுத்தியும், விதிமீறல்களில் ஈடுபட்ட 770 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவ்வாகனச் சோதனையில் சுமார் 200 காவலர்கள் ஈடுபட்டனர்.


No comments
Thank you for your comments