பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 8 ரவுடிகள் கைது
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ( History Sheet Rowdies ) மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான
1 ) எலியப்பு ( எ ) விக்னேஷ் ( 20 ) த/பெ.திருமலை, பஜனை கோயில் தெரு, பழையநல்லூர்,
2 ) அப்புனு ( எ ) ஆசைத்தம்பி ( 34 ) த/பெ.பாலன், அம்பேத்கர் தெரு, நடுவீரப்பட்டு,
3 ) சதீஷ் ( 30 ) த/பெ.ராஜேஷ், பஜனை கோயில் தெரு, பழையநல்லூர்,
4 ) ராஜாராம் ( 38 ) த/பெ.துரைசாமி, பஜனை கோயில் தெரு, பழையநல்லூர்,
5 ) அட்டை ( எ ) வெங்கடேசன் ( 20 ) த/பெ.சேகர், பஜனை கோயில் தெரு, பழையநல்லூர்,
6) மனோஜ் ( 19 ) த/பெ.செல்வம் , ஒத்தவாடை தெரு, பழையநல்லூர்,
7 ) யுவராஜ் ( 19 ) த/பெ.ஜெய்சங்கர், வீரசிவாஜி தெரு, பருத்திப்பட்டு, காட்ரம்பாக்கம் மற்றும் இவர்களது நண்பரான
8 ) சுனில் ( 18 ) த/பெ.செல்வம், பஜனை கோயில் தெரு, பழையநல்லூர்,
ஆகியோர்கள் தலைமறைவாக இருந்துகொண்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட இருந்தவர்களை சோமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்களின் தலைமையிலான குழு மேற்படி நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்,.
மேலும் , காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட நினைக்கும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

No comments
Thank you for your comments