Breaking News

சறுக்கல்களை சவால்களாக மாற்றுங்கள்... காஞ்சிபுரம் ஆட்சியர் உத்வேக பேச்சு

காஞ்சிபுரம்,செப்.3-

சறுக்கல்களை சவால்களாக மாற்றக் கற்றுக்கொள்ளுங்கள் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெள்ளிக்கிழமை நடந்த போட்டித்தேர்வர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு தொடக்க விழாவில் பேசினார்.

 காஞ்சிபுரம் ஆட்சியர் மா.ஆர்த்தி
விழாவில் மாணவிக்கு கையேட்டினை வழங்குகினார்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.விழாவிற்கு ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை வகித்து போட்டித்தேர்வர்களுக்கான கையேடுகளை வழங்கி பேசியது..

திங்கள் தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வரும் மனுக்களில் பெரும்பாலனவை அரசு வேலை கேட்டுத் தான் வருகின்றன.போட்டித்தேர்வுகள் மூலமாகத் தான் அரசு வேலை பெற முடியும்.அரசு வேலை என்பது சுலபமில்லை.கஷ்டப்பட்டு படித்து போட்டித் தேர்வில் வெற்றி பெற்றால் தான் அரசு வேலை கிடைக்கும். அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.

செய்தித்தாள்களை அதிகமாக படித்து சிறு குறிப்புகள் எடுத்துக் கொள்ளுதல்,திரும்பி திரும்பி படித்தல்,திட்டமிட்டு படித்தல்,குழுவாக இணைந்து படித்தல் போன்ற செயல்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றியைத் தேடித் தரும்.முக்கியமாக எந்த சறுக்கல்கள் வந்தாலும் அவற்றை சவால்களாக மாற்றும் எண்ணத்தை வரவழைத்துக் கொண்டால் வாழ்வில் வெற்றி உறுதி.

எத்தகைய சூழ்நிலையிலும் குறிக்கோளிலிருந்து விலகி விடவே கூடாது. லட்சியத்தை அடையும் வரை விடாமுயற்சி இருக்க வேண்டும் என்றும் பேசினார்.

விழாவிற்கு மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் ஸ்ரீனிவாசராவ் முன்னிலை வகித்தார்.வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் ஆர்.அருணகிரி வரவேற்றார். திறன் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஆர்.ரவீந்திரன் நன்றி கூறினார்.

✒ செய்தியாளர் E. ஜாபர் 


No comments

Thank you for your comments