அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் -ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு
சாங்லாங்:
தேஜு அருகே பூமிக்கடியில் 48 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் சாங்லாங் பகுதியில் இன்று பிற்பகல் 3.06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. தேஜு அருகே பூமிக்கடியில் 48 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. பாதிப்பு குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
No comments
Thank you for your comments