வேலூர் மாநகர் நல அலுவலர் பணியிடமாற்றம்.. இனி மெல்ல மெல்ல கொரோனா தலைதூக்கும்!
வேலூர், ஆக.17-
வேலூர் மாநகர் நல அலுவலராக மணிவண்ணன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் வேலூரில் இனி மெல்ல மெல்ல கொரோனா தலைதூக்கும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்டு 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஆங்காங்கே அரசு நகர்ப்புற மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. ஆனால் இங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் என்று யாருமே சரி வர பணிக்கு வருவதில்லை. கொரோனா முகாம் நடக்கிறது என்று அனைவரும் ஏமாற்றி விட்டு சுற்றித்திரிகின்றனர்.
இதற்கு முன்னர் மாநகர் நல அலுவலராக இருந்த சித்திரசேனா பம்பரமாய் சுழன்று செயல்பட்டார். 60 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு நகர்ப்புற மருத்துவமனைகளை அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வந்தார். அத்துடன் கொரோனா தொற்று பரவலை சுகாதார அலுவலர்களுடன் 4 மண்டலங்களிலும் இணைந்து செயல்பட்டு வெகுவாக குறைத்தார். இதில் சித்திரசேனாவின் பங்கு அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் திடீரென்று சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய மணிவண்ணன் மீண்டும் வேலூர் மாநகராட்சிக்கு மாநகர் நல அலுவலராக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பணியமர்த்தப்பட்டாலே கொரோனா வைரஸ் அதிகரிக்கும். இவர் களத்தில் இறங்கி பணியாற்ற மாட்டார். இருக்கையில் அமர்ந்து கொண்டிருப்பார். இல்லையெனில் வீட்டுக்கு சென்று விடுவார். இப்படி நிலைமை மிகவும் மோசமாக இருந்து வந்தது. இந்நிலையில் வேலூர் மாநகராட்சியில் மாநகர் நல அலுவலர் சித்திரசேனாவின் சீரிய முயற்சியால் கொரோனா அடியோடு ஒழிக்கப்பட்டது எனலாம்.
எனக்கென்ன என்று மெத்தன போக்கில் பணியாற்றும் மணிவண்ணன் போன்றோர் மாநகர் நல அலுவலராக பணியமர்த்தப்பட்டதால், மாநகர் பொதுமக்கள் மற்றும் வேலூர் மாநகராட்சியில் பணியாற்றும் 4 மண்டலங்களை சேர்ந்த சுகாதார ஆய்வாளர்களும் ரத்தக்கண்ணீர் வடிக்கத் தொடங்கியுள்ளனர்.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு செல்போன்களில் குறுந்தகவல் வருவதே இல்லை. குறிப்பாக 1வது மண்டலத்தில் இதுகுறித்து இதுநாள் வரையில் குறுஞ்செய்தி வரவே இல்லை என்று கேட்டால் பதிவு செய்து கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே குறுந்தகவல் வரும் என்று கூலாக பதில் சொல்கின்றனர்.
இருப்பது 2 டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள்தான், அப்படி இருக்கும் போது 500க்கும் மேற்பட்டோருக்கு குறுந்தகவல் அனுப்புவது எப்படி சாத்தியம் என்று கேள்வி கேட்கச் செல்லும் பொதுமக்களையே திரும்பி கேள்வி கேட்டு சாமார்தியமாக அனுப்பி விடுகின்றனர் அந்த டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள்.
பல தனியார் நிறுவனங்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட குறுந்தகவலை தங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்கின்றனர். ஆனால் காட்பாடியில் டான்போஸ்கோ, மற்றும் தாராபடவேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டோர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இப்படி ஒவ்வொரு நாளும் பதில் சொல்லி காலம் கடத்தி வருகின்றனர் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
இவர்களை தட்டிக் கேட்க வேண்டிய அதிகாரிகள் கைகட்டி வாய்பொத்தி அமைதி காக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் சங்கரன்தான் ஏதாவது ஏற்பாடுகள் செய்து குறுந்தகவல் வருவதற்கு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் புறநகர்களில் தடுப்பூசி செலுத்தி கெணீ£ள்வோருக்கு உடனடியாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வருகிறது. மாநகர எல்லையில் இப்படி ஒரு பிரச்னை தொடர்ந்து இருந்து வருகிறது.
மருத்துவர்கள், செவிலியர்கள் பணிக்கு வருகிறார்களா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மணிவண்ணன் போன்றோரையே தேட வேண்டிய நிலையில் இருப்பது மேலும் வருத்தமளிக்க கூடிய விஷயமாக உள்ளது.
சீட்டை விட்டு வெளியில் வராமல் குளிரூட்டப்பட்ட அறையில் சொகுசாக இருப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர்தான் இந்த மணிவண்ணன்.
3வது அலை பரவும் நேரத்தில் இதுபோன்ற பணியாற்றாமல் மணிவண்ணனை திருப்பி அனுப்பி விட்டு சித்திரசேனா போன்ற பணியாற்றக் கூடிய மாநகர் நல அலுவலரை வேலூர் மாநகராட்சிக்கு பணி நியமனம் செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
இவர் இருந்தால் வேலூர் மாநகர எல்லையில் கொரோனா 3வது அலை சுனாமியை விட தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இதுபோன்று சம்பளம் வாங்கிக் கொண்டு சீட்டை சூடேற்றும் அதிகாரிகள் வேலூருக்கு தேவையில்லை என்பதே பலரது விருப்பமாகவும் உள்ளது. உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலூருக்கு சிறப்பாக பணியாற்றக் கூடிய, அதாவது சுயநலம் பாராமல் பொதுநலத்துடன் பணியாற்றும் நகர் நல அலுவலரை நியமிப்பாரா என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே வேலூர் மாநகராட்சியில் ஏக்கு போக்கான ஆளுங்க அதிகம்... இப்ப இவர் வேற... அய்யோ பாவம்... மாநகராட்சி ஆணையர்... இதுபோன்றோர்களை எப்படி சமாளிப்பாரோ...
No comments
Thank you for your comments