Breaking News

மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது தவறல்ல: மாஜிஸ்திரேட் ஜாமின் உத்தரவில் விளக்கம்

ராய்காட்:

இந்திய சுதந்திர தினத்தின் எண்ணிக்கை தெரியாத மகராஷ்டிர முதல்வரை நான் அருகில் இருந்தால் கன்னத்தில் அறைந்து இருப்பேன் என்று மத்திய அமைச்சர் நாராயண் ரானே கூறியதற்காக அவரைக் கைது செய்தது தவறல்ல.

செய்தியாளர் முன்னிலையில் ரானே தனது கருத்தை கூறியுள்ளார். எனவே அது தொடர்பாக அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால்தான் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது என்று ரெய்காட் மாவட்ட மாஜிஸ்திரேட் எஸ் எஸ் பாட்டில் தன்னுடைய ஜாமின் உத்தரவில் விளக்கம் தந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் புதிதாக மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட கொண்ட நாராயண் ரானே மும்பையில் கடந்த சில நாட்களாக 'ஜன் ஆசீர்வாத யாத்திரை' என்ற பெயரில் பேரணி நடத்தி வந்தார்.


ராய்காட் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர், "நாடு சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆனது என்பது  கூட தெரியாத மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை ஓங்கி அறைய வேண்டும்" என மத்திய அமைச்சர் நாராயண் ரானே பேசியுள்ளார்.


மத்திய அமைச்சர் நாராயண் ராணேயின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாசிக் மற்றும் புணே காவல் நிலையங்களில் சிவசேனை அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை நேற்று காலை பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் நாராயண் இல்லத்திற்கு சென்ற நாசிக் காவல்துறையினர் விசாரணைக்காக ரத்னகிரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நாராயண் ரானே கைது செய்யப்பட்டதும் அவரை செவ்வாய் அன்று இரவு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அவர் மீது ஐபிசி 189, 504, 505, ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

கைது செய்வது தேவைப்படாத நேரத்தில் போலீசார் குற்றம்சாட்ட வரை கைது செய்யக்கூடாது என்று சிஆர்பிசி பிரிவு நாற்பத்தி ஒன்று ஏ கூறுகிறது. அதன்படி மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை போலீசார் கைது செய்திருக்க வேண்டியதில்லை என்று அவரது  வழக்கறிஞர் ராஜேந்திர ஷிரோத்கர் மாஜிஸ்திரேட் முன் வாதாடினார்.

மாஜிஸ்திரேட் அவரது கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதே 41ஏ பிரிவின் கீழ் குறிப்பிட்ட சில குற்றச்சாட்டுகளுக்கு கைது செய்யவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என மாஜிஸ்திரேட் கூறினார்.

நாராயண் ரானேக்கு ஜாமின் வழங்கிய மேஜிஸ்ட்ரேட் இதுபோன்று இன்னும் ஒரு  அமைச்சர் பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்தார். மேலும், போலீஸ் விசாரணைக்கு அமைச்சர் ஒத்துழைக்க வேண்டும். அமைச்சரின் குரல் மாதிரி பதிவு செய்ய விரும்பினால் அமைச்சர் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் அதுதவிர வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி செப்டம்பர் 13ம் தேதி ஆகிய இரண்டு தினங்களிலும் வழிகாட்டு மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் முன்னிலையில் அமைச்சர் ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

பாஜக – சிவசேனை இருதரப்பினர் மோதல்

மத்திய அமைச்சர் நாராயண் ரானே  முதலமைச்சர் உத்தவ் தாக்கரே குறித்து கருத்துக்கு எதிராக அவரது இல்லத்தை நோக்கி சிவசேனா கட்சியினர் நேற்று காலையில் அணிவகுத்துச் சென்ற நிலையில், பாஜக - சிவசேனை ஆகிய இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments