Breaking News

சத்தீஷ்கர் முதல்வராக பாகேல் தொடர்வார் - ராகுல் காந்தி முடிவு

புதுடெல்லி, ஆக. 25-

சத்தீஷ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பாகேல் தொடர்வார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு முதல்வரை தேர்வு செய்யும் பணி மிகவும் சிக்கலானதாக அமைந்தது. அப்பொழுது மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் பூபேஷ் பாகேல்.



சட்டமன்றத் தேர்தலின்போது தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக இருந்தவர் சிங் தியோ. அவர்கள் இருவரும் பேசி பூபேஷ் பாகேல்  மாநில முதல்வராக பதவி ஏற்பது என்று முடிவு செய்யப்பட்டது. பாகேல் மாநில முதல்வராக பொறுப்பேற்றார்.

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வர் பதவியில் இருந்து பாகேல் விலகுவது என்றும் சிங் தியோ முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்வது என்றும் உடன்பாடு ஏற்பட்டதாக சிங் தியோ கூறினார்.

அத்தகைய உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்று பாகேல் மறுத்தார்.

சிங் தியோ ஆதரவாளர்கள் முதல்வராக சிங் தியோவை நியமிக்க வேண்டும் என்று கூறத் தொடங்கினார்கள்.

இந்தப் பின்னணியில் டெல்லிக்கு வந்து ராகுல்காந்தியை  சந்திக்கும்படி இருவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது .அதன்படி இருவரும் ஒன்றாக வந்து ராகுல்காந்தியை சந்தித்தனர் . 

ராகுல் காந்தி தனித்தனியாக அவர்களிடம் பேசினார் இறுதியில் பூபேஷ் பாகேல் மாநில முதல்வராக தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவையில் உள்ள சகாக்களை பாகேல் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று ராகுல்காந்தி அவரிடம் கண்டிப்பாக வலியுறுத்திக் கூறினார். இந்த முடிவை சிங் தியோவும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

No comments

Thank you for your comments