TIIC தொழில் கடன் மேளா
வேலூர்:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசுநிதிக் கழகம் ஆகும். 1949ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.
இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
வேலூர் கிளை அலுவலகத்தில் (முகவரி எண். 73/A, காட்பாடி மெயின் ரோடு, (Vasan ENT கிளினிக் - முதல் தளம், காந்தி நகர், வேலூர் - 632006) குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா 19.08.2021 முதல் 27.08.2021 வரை நடைபெறுகிறது.
இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் டி.ஐ.ஐ.சி.யின்; பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதனமானியம், 6 விழுக்காடு வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ.50 இலட்சம் வரை வழங்கப்படும்.
இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் பொதுகடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுகட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். NEEDS திட்டத்திற்கு ஆய்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் / தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.
மேலும் தகவலுக்காக
கிளைமேலாளர்,
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்,
வேலூர் கிளை 0416-2249821,
மொபைல்: 9444396852
PRO செய்தி வெளியீட்டு எண்:407/ நாள்:19.08.2021

No comments
Thank you for your comments