குப்பை கிடங்காக மாறும் ஆவடி மாநகராட்சி
திருவள்ளூர், ஆக.22-
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோன தற்போது குறைந்து வரும் நிலையில், பல தொற்று நோய்கள் பரவும் நிலையில் ஆங்காங்கே குப்பை கூலங்களாக காட்சியளிக்கிறது.
துப்புரவு பணியாளர்கள் சரிவர குப்பைகளை அகற்றாததால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இந்த குப்பைகளில் மாடுகள் அதிக அளவில் காணப்படுகிறது. குப்பைகளை மாடுகள் கிளறிவிட்டு சாலை முழுவதும் பரப்பிவிடுகின்றன. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் மட்டுமன்றி போக்குவரத்தும் பாதிக்கப்படுகின்றன. சாலையில் வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
தேங்கிய குப்பை கூலங்களால் புழு பூச்சிகளும் அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமின்றி மழைக் காலம் என்பதால் பல்வோறு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு பின்புறமுள்ள முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கல்வெட்டு மறையும் அளவுக்கு குப்பைகளை கடந்த ஆண்டில் கொட்டி வந்தனர். நம் காலச்சக்கரம் நாளிதழில் செய்தியாக வெளிவந்ததை தொடர்ந்து அன்று ஒரு வாரம் மட்டுமே சுத்தமாக வைத்து பிளிசிங் போடப்பட்டது மீண்டும் அதே நிலைமைதான் நீடிக்கின்றன.... அப்பகுதியிலுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் இதைச் சற்றும் கவனிப்பதில்லை..
தற்போது நல்லாட்சி செய்து வரும் முதலமைச்சர் அவர்களுக்கு இப்பகுதி மக்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். தற்போது மீண்டும் அம்மாவின் கல்வெட்டு அருகில் குப்பைகள் கொட்டி அலங்கோலமாக இருக்கிறது.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் தற்போது அவருடைய அலுவலகத்தில் குப்பைகளை அகற்றும் பணியிலும் பாத்ரூம் சுத்தம் செய்வதிலும் நேரடியாக இறங்கி சுத்தம் செய்தான். இதனை பொதுமக்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்.
அதேபோல் அனைத்து தொகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் நியமிக்க முடியுமா பொதுமக்கள் கேள்வி.. அந்தந்த பகுதியில் உள்ள துப்புரவு அலுவலர்கள் உடனடியாக ஆய்வு செய்து குப்பைகளை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறைந்து வரும் கொரோனா தொற்று அதிகரிக்காமல் காக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆவடி மாநகராட்சி சுகாதார மாநகராக மாறுமா பொருத்திருந்து குப்பை கிடங்காக இருக்கமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்...
🔏 செய்தியாளர் பிரேம் குமார்



No comments
Thank you for your comments