Breaking News

ரூ. 50 லட்சம் அபராதம்... விதியை மீறிய சிறப்பு பிரிவு மருத்துவ மாணவர்கள் - மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவு

சென்னை:

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற ஒப்பந்த விதியை மீறிய, சிறப்பு பிரிவு மருத்துவ மாணவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் வசூல் செய்ய மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.



தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், நரம்பியல், இதயவில் போன்ற சிறப்பு பிரிவு மருத்துவ படிப்புகள் பயிலும் மாணவர்கள், 2 ஆண்டுகள் கட்டாயம் ஒப்பந்த அடிப்படையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆனால், 3 ஆண்டு படிப்பை முடித்த சிறப்பு பிரிவு மருத்துவ மாணவர்கள், கடந்த 30ம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. 

எந்த மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்காமல் இருந்துள்ளனர் என்ற விவரத்தை கண்டறிந்து அவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம் வசூலிக்க அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு, மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.


No comments

Thank you for your comments