கண்காணிப்பு கேமராக்கள் குற்றச் செயல்களை தடுக்க பெரிதும் உதவுகிறது - காவல்துறைக் கண்காணிப்பாளர் எம்.சுதாகர்
காஞ்சிபுரம், ஆக.26-
கண்காணிப்பு கேமராக்கள் குற்றச் செயல்களை தடுக்கவும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் பேருதவியாக இருந்து வருவதாக காஞ்சிபுரம் காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP) எம்.சுதாகர் வியாழக்கிழமை அன்று பேசினார்.
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள வேதாச்சலம் நகரில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் காவல்துறையினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இக்கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை காஞ்சிபுரம் காவல்துறைக் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் இயக்கி வைத்து பேசியதாவது,
வேதாச்சலம் நகரில் ரூ.8 லட்சம் செலவில் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது என முடிவு குடியிருப்போர் நலச்சங்கம் முடிவு செய்திருக்கிறது.தற்போது முதற்கட்டமாக ரூ.6லட்சம் மதிப்பில் 13 தெருக்களில் 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதில் வேதாச்சலம் நகர் முன்னுதாரணமாக திகழ்வது மகிழ்ச்சியளிக்கிறது.குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும், குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், காவல்துறையினரின் பணிச்சுமையை வெகுவாக குறைக்கவும் பேருதவியாக இருந்து வருகிறது.
திருடர்கள் பயமின்றி முதியோர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் உணர்கின்றனர்.தற்போது வேதாச்சாலம் நகரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் இரவு நேரத்தில் தெளிவாக தெரியும் வகையிலும், பதிவானவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நவீன கேமராக்களாகும் எனவும் எஸ்.பி., எம்.சுதாகர் பேசினார்.
விழாவிற்கு வேதாச்சலம் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஜெ.பாஸ்கர், செயலாளர் எஸ்.வெங்கடேசன், பொருளாளர் டி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி., எஸ்.முருகன், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ராஜகோபால் ஆகியோர் உட்பட காவல்துறை அதிகாரிகள்,வேதாச்சலம் நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments