பட்டப்பகலில் வீட்டு கதவு உடைத்து நகை, பணம் கொள்ளை...
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டு உடைத்து 22 சவரன் நகை மற்றும் ரூ.10,000 கொள்ளை அடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காஞ்சி தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணி காரணமாக திருவண்ணாமலையில் தங்கி இருந்து வாரம் ஒரு முறை அசோக்குமார் வீட்டுக்கு வருவது வழக்கம். அதேபோல் அவரது மனைவி ஒரகடம் பகுதியில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஒரு மாதம் முன்பு இவர்களது குழந்தைக்கு காதணி விழா நடைபெற்ற போது அன்பளிப்பாக தங்க மோதிரம் உறவினர்களால் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை உறவினர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இன்று மதியம் வீடு திரும்பிய போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டினுள் சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த பீரோ கட்டில் உள்ளிட்ட பகுதிகளில் பொருட்கள் சிதறி கிடந்தன.
இதை அடுத்து பீரோவை சோதனை செய்தபோது அதில் இருந்த 22 சவரன் நகை, ரூபாய் பத்தாயிரம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து காஞ்சி தாலுக்கா காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments
Thank you for your comments