Breaking News

நில பிரச்சனை தகராறு - 2 பேர் மண்டை உடைப்பு 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் புலிக்கரை அடுத்த கொல்லநூர் கிராமத்தில் வசிப்பவர்கள் பெரியசாமி மனைவி செல்வராணி(58) மகன் சுரேஷ்(37) .


இவர்களுக்கு சொந்தமான 6 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.  இவர்களது நிலம் அருகில் வடிவேல் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடிவேல் நிலத்தில் கிணறு வெட்ட வெடி வைத்துள்ளார். வெடி வெடித்ததில் செல்வராணி வீடு மற்றும் அருகில் உள்ள வீடுகள் அதிர்வில் விரிசல் விட்டுள்ளது. 


இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் இரு குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் வடிவேலு மற்றும் அவரது மகன் முத்து அவரது மனைவி கௌவரா ஆகியோர் சேர்ந்து இரும்பு ராடு கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். 

இதில் பெரியசாமி மகன் சுரேஷ் மற்றும் தங்கதுரை என்பவருக்கு மண்டை உடைந்தது. மேலும் செல்வராணி மற்றும் அவரது உறவினர்கள்  சங்கீதா வெங்கடேசன் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து மதிகோன் பாளையம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

No comments

Thank you for your comments