இந்திய ஜனநாயக கட்சி கொடி ஏற்று விழா
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர், அரியநாச்சி, தொண்டங்குறிச்சி, சேப்பாக்கம் ஊராட்சிகளில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் பிறந்தநாள்விழா முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.
விழாவிற்கு,மாவட்ட செயலாளர் ஜெயவேல், மங்களூர் ஒன்றிய தலைவர் ராஜதுரை தலைமை தாங்கினர். மங்களூர் ஒன்றிய துணைதலைவர் கே.ஆர்.ஏ அசோக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மண்டல தலைவர் ஆசிரியர் சுப்ரமணியன் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் பிறந்தநாள் விழா முன்னிட்டு அரியநாச்சி, தொண்டங்குறிச்சி, வேப்பூர் , சேப்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாப்பட்டது.
பின்னர் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் கொளஞ்சியப்பன், மங்களூர் ஒன்றியச் செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட பா.கு துணைசெயலாளர் ராஜவேல், மாவட்ட, ஒன்றிய, நகரம் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்

No comments
Thank you for your comments