Breaking News

சிறுபான்மையினர் நலன் குறித்து ஆய்வு கூட்டம்

காஞ்சிபுரம்:

தமிழக அரசு சிறுபான்மையினரான திட்டங்களை முழுமையாக செயல்படுத்தும் என்றும்,  சிறுபான்மையினர் தங்களது வழிபாட்டு தலங்களில் நிம்மதியாக வழிபட உறுதுணையாக தமிழக அரசு இருக்கும் என்றும் சிறுபான்மை நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினர் நலன் குறித்து ஆய்வு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் சிறுபான்மை நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று  பலதரப்பட்ட சிறுபான்மையினரின் கருத்துக்களை கேட்டறிந்தார்.



சிறுபான்மை நல வாரிய தலைவர்  பீட்டர் அல்போன்ஸ் செய்திகயாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, 

 கடந்த  மூன்றாண்டு காலத்தில் சிறுபான்மை நலன் என்பது ஒரு செயலற்று  காணப்பட்டது. சிறுபான்மை மாணவர்களுக்கு கல்விக்கடன் உள்ளிட்டவை, சிறுபான்மையின பெண்களுக்கு கடன் உதவி, சிறுபான்மையினருக்கான திட்டங்கள் போன்றவை பெயர் அளவிலேயே இருந்தகாக,  நாங்கள் ஆய்வு செய்த மாவட்டங்களில் பல சிறுபான்மையினர் கூறினார்கள். 

எனவே இதை கலையும் விதமாக நாங்கள் தமிழக முதல்வர் பார்வைக்கு எடுத்துச் சென்று தீர்வு காண்போம்.. தமிழக அரசின் சிறுபான்மையினர் நல திட்டங்கள் மக்களுக்கு சென்றடையவும், மக்களுடைய கோரிக்கைகள் தமிழக அரசுக்கு எடுத்துச் செல்லவும் இந்த ஆய்வுக் கூட்டங்கள் மூலம் சிறுபான்மை நல வாரியம் செயல்படுத்தும் என தெரிவித்தார்.  

மேலும் கூறுகையில், தமிழகம் முழுவதும் சிறுபான்மையின மக்கள் தங்களது வழிபாட்டு தலங்களில் வழிபடுவதற்கு தடைகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. வழிபாட்டுத்தலங்கள் கட்ட முடியவில்லை, மேலும் சில இடங்களில் அவர்களுக்கான இறப்பிற்குப்பின் அடக்கம் செய்வதிலும் இடப்பிரச்சனை உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த அரசு சிறுபான்மை இன மக்களுக்கு உண்டான அனைத்து திட்டங்களும் செயல்படுத்தும் மேலும் அவர்களுடைய  கோரிக்கைகளை  நிறைவேற்றும் என பீட்டர் அல்போன்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தஆய்வு கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments