அரசுப் பேருந்தை கழுத்தில் பூ மாலையுடன் வழிமறித்த மதுப்பிரியர்
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மது பிரியர் ஒருவர் கழுத்தில் பூ மாலையுடன் அரசு பஸ்சை வழிமறித்துக் கொண்டு போக விடாமல் தடுத்து நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.
அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்று ஓரமாக படுக்க வைத்தனர். இதனால் 20 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது
விருத்தாசலம் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே 5-க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் இருப்பதால் அதில் கள்ளத்தனமாக கடை திறப்பதற்கு முன்பாகவே மது விற்பனை செய்யப்படுவதால் இப்பகுதியில் அடிக்கடி மதுப்பிரியர்கள் காலையிலேயே குடித்துவிட்டு வேலைக்குச் செல்லும் பொது மக்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர் என பயணிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது

No comments
Thank you for your comments