தருமபுரியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகள் வழங்கல்
தருமபுரி:
தருமபுரியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை செய்து கேக் வெட்டி கொண்டாட்டம்.
ஆகஸ்ட் 25 பிறந்தநாள் காணும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 69 வது பிறந்த நாளையொட்டி தருமபுரி சாலை விநாயகர் கோவிலில் தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரில் அர்ச்சனை செய்து சிறப்பு பிரார்த்தனை வழிபாடு செய்தனர்.
பின்னர் தருமபுரி பேருந்து நிலையத்தில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி 69 மரக்கன்றுகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கழக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், மாநில கேப்டன் மன்ற துணை செயலாளர் புல்லட் மாரிமுத்து, மாவட்ட அவைத்தலைவர் தங்கவேல், மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் காவேரி வர்மன், நகர செயலாளர் பாண்டியன், தர்மபுரி ஒன்றிய செயலாளர்கள் விக்னேஷ், சரவணன், மற்றும் அணி நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments