பென்னிகுயிக் இல்லத்தில் கருணாநிதி நூலகமா? - செல்லூர் ராஜூக்கு முதலமைச்சர் பதில்
சென்னை:
மதுரையில் பென்னிகுயிக் வாழ்ந்த வீட்டை இடித்துவிட்டு அந்த இட்த்தில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைப்பதா? என்ற செல்லூர் ராஜூ கேள்விக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதில் அளித்தார்.
சட்டசபையில் 2021-22ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
அ.தி.மு.க. எம்.எல். ஏ செல்லூர் ராஜூ பேசும் போது,
மதுரையில் உள்ள பென்னிகுவிக் இல்லத்தை மாற்றி கலைஞர் பெயரில் நூலகம் அமைக்க உள்ளதாக தகவல் வருவதாக கூறினார்.
குறுக்கிட்டு பேசிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,
அந்த இல்லம் பென்னிகுவிக் இல்லம் இல்லை என்றும், தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், பென்னிகுவிக் 1841-1911-ல் வாழ்ந்துள்ளார். ஆனால் இந்த இல்லம் அவரது காலத்திற்கு பின் கட்டப்பட்டுள்ளது. எனவே, இது பென்னிக்குயிக் வசித்த இல்லமாக இருக்க முடியாது என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
பென்னிகுவிக் இல்லத்தை அப்புறப்படுத்தி கலைஞர் பெயரில் நூலகம் கட்டுவதாக உறுப்பினர் செல்லூர் ராஜூ கூறியுள்ளது தவறான கருத்து. அது பென்னிகுவிக் இல்லம் என்பதற்கான ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள் அதனை மாற்ற அரசு தயாராக உள்ளது.
ஆதாரம் இல்லாமல் கருத்தை பதிவு செய்ய வேண்டாம் எனவும், முன்னாள் அமைச்சர் செவிவழி செய்திகளை பேரவையில் பதிவு செய்வது பொருத்தமான செயல் அல்ல எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

No comments
Thank you for your comments