கொரோனா விதிமுறைகளை மீறினால் உரிமம் ரத்து... அதிரடி அறிவிப்பு
சிங்கப்பூர்:
கொரோனா விதிமுறைகளை மீறினால் நாட்டில் நிரந்தரமாக தங்குவதற்காக வழங்கப்பட்டுள்ள உரிமம் ரத்து செய்யப்படும் என்று சிங்கப்பூர் எச்சரித்துள்ளது.
உலகில் கொரோனாவின் மூன்றாவது மற்றும் நான்காவது அலை தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த டெல்டா மற்றும் பீட்டா வகை, வைரஸ்கள் உலகில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதால், அங்கு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
இதனால் அதைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அந்த வகையில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால், நாட்டில் நிரந்தரமாகத் தங்குவதற்கு வழங்கப்பட்டுள்ள உரிமம் ரத்து செய்யப்படும் என்று சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிரந்தரக் குடியேற்ற உரிமம் மற்றும் நீண்ட கால குடியேற்ற உரிமம் வைத்திருப்பவர்கள், கொரோனா கட்டுப்பாட்டுக்கான புதிய விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். அந்த விதிமுறைகளை மீறினால் அவர்களது உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments
Thank you for your comments