அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனையில் பல்வேறு வேலை வாய்ப்பு- கடைசி தேதி 03/08/2021
சென்னை:
கோவிட் -19 பேரிடர் மற்றும் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சென்னை சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனைக்கு கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் ஆறு (6) மாதங்களுக்கு மட்டும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடங்கள் முழுவதும் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆறு (6) மாதங்களுக்கு மட்டும் நிரப்பப்படவுள்ளன. மேலும், இப்பணியிடங்கள் எக்காரணம் முன்னிட்டும் பணிவரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்படமாட்டது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வி தகுதியின் சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் (Resume) அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
சமூக மகப்பேறியல் இயக்குநர்,
சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா
காந்தி தாய்சேய் நல மருத்துவமனை, சேப்பாக்கம்,
சென்னை - 05.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.08.2021
குறிப்பு: நிர்ணயிக்கப்பட்ட (03.08.2021) தேதிக்கு பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.விஜயா ராணி அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செனனை-01


No comments
Thank you for your comments