அதிக லாபம் தரும் பப்பாளி சாகுபடி - விவசாயிகள் மகிழ்ச்சி
கடலூர்:
வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளான அசகளத்தூர், சேதுவராயன்குப்பம், ஈய்யனூர் போன்ற பகுதிகளில் மக்காச்சோளம், நெல், கரும்பு போன்ற பயிர்களை விவசாயிகள் பயிர் இடுவது வழக்கம். தற்போது பெய்த பருவம் தவறிய மழையால் மழையில் சேதமடைந்தன. அதேபோல சில நேரங்களில் கடுமையான வறட்சியாலும் இந்த பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் அவ்வப்போது வன விலங்குகளால் இந்த பயிர்கள் சேதம் அடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் புதிய முயற்சியாக தோட்டக்கலை பயிரான ஒட்டுரக பப்பாளி சாகுபடி செய்துள்ளனர். வறட்சியை சமாளித்து நீர் மேலாண்மையை கையாளும் விதாமக சொட்டுநீர் பாசனம் முறையில் குறைவான அளவு தண்ணீர் பாய்ச்சி பப்பாளியைச் சாகுபடி செய்துவருகின்றனர் இதன் அறுவடை காலம் என்பது மாதங்கள்.
ஒரு ஏக்கரில் செடி நட்டு 9 மாதத்திற்கு பின் அறுவடை செய்யப்படும் போது நாள் ஒன்றுக்கு 300 கிலோ வரை பப்பாளி அறுவடை செய்யப்படுகிறது. இந்த பப்பாளி செடிகளில் 9 மாதம் முதல் 24 மாதங்கள் வரை மகசூல் பெறலாம். இரண்டு ஆண்டில் 200 டன் பப்பாளி மகசூல் பெறப்படுகிறது.
மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ. 12 முதல் 20 வரை விலை கிடைக்கிறது , வியாபாரிகளே நேரடியாக வந்து பப்பாளியை ஏற்றுமதி செய்து கொண்டு செல்வதால் நல்ல லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

No comments
Thank you for your comments