Breaking News

அரசு டாஸ்மாக் கடையில்ஆய்வு... கையிறுப்பு குறைவு... சூப்பர்வைசர் ரவி உட்பட 5 பேர் பணி இடை நீக்கம்

கடலூர்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஸ்டேட் பேங்க் அருகே உள்ள அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. 


மதுபாட்டில் விற்பனை பணத்தில் முறைகேடு செய்துள்ளதாக  இக்கடையில் பணிபுரியும் விற்பனையாளர்கள்  சூப்பர்வைசர் ரவி உட்பட ரமேஷ், குப்புசாமி, வீரசேகர், வேல்முருகன்  ஆகிய 5 பேரையும் தமிழ்நாடு மாநில வாணிப கழக்கத்தின் உயரதிகாரியால்  பணியிடை  நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் அக்கடையில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான  உத்தரவு நகல் வராத நிலையில், வழக்கம் போல் இன்று காலை மதுபான கடையை திறந்து விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். 


அப்பொழுது அக்கடைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட விற்பனையாளர்கள், கடைக்குள் சென்று, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விற்பனையாளர்களை, கணக்கு வழக்குகளை ஒப்படைத்து விட்டு வெளியே செல்லுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனால் பணியிடம் நீக்கம் செய்யப்பட்ட விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர் உத்தரவின்றி கணக்கு வழக்குகளை, விற்பனையாளர்களுக்கு  காண்பிக்க முடியாது என்று கூறி வெளியே செல்லும் போது, ரமேஷ்குமார் என்ற விற்பனையாளர்கள் மட்டும் வெளியே விடாமல் உள்ளே வைத்து பூட்டு போட்டு பூட்டினர்.

இதுகுறித்து புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாச்சலம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது மதுபான கடையில் உள்ளே இருந்த ரமேஷ் குமார், கைகளுக்கு பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த, சானிடைசர் கேனை,  கொண்டு தற்கொலை செய்துகொள்வதாக கூறினார்.

உடனடியாக காவல்துறையினர் மதுபான கடையை திறந்து உள்ளே, ரமேஷ் வைத்திருந்த சானிடைசர் கேனை பறிமுதல் செய்தனர். 

மேலும், இக்கடையில் பணிபுரியும் விற்பனையாளர்கள்  சூப்பர்வைசர் ரவி உட்பட ரமேஷ், குப்புசாமி, வீரசேகர், வேல்முருகன்  ஆகிய 5 பேரையும் தமிழ்நாடு மாநில வாணிப கழக்கத்தின் உயரதிகாரியால்  பணியிடை  நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இதனால் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மதுபான கடையின் கணக்கு வழக்குகள் அனைத்தும் சரியாக இருந்தும்,  காழ்ப்புணர்ச்சி காரணமாக 5 பேரை பணியிடம் நீக்கம் செய்யப்பட்டதாகவும், மதுபான கடைக்கு மது பிரியர்கள் கொண்டு வரும், சில்லரை காசுகள், கிழிந்த ரூபாய் நோட்டுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வீணாக உயரதிகாரிகள் பழிவாங்கும் படலத்தில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

No comments

Thank you for your comments