நடிகர் விவேக் மரணம்: விசாரணைக்கு ஏற்றது மனித உரிமை ஆணையம்
சென்னை:
கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டு அதன் அவசியம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணரவு ஏற்பட பிரசாரம் செய்தவர் விவேக். தடுப்பூசி போட்டுக கொண்ட சில நாளில் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து விசாரணை தேவை என்று விழுப்புரம் சமூக ஆர்வலர் மனித உரிமைகள் ஆணையத்திடம் மனுச்செய்தார். அவரது மனுவை ஏற்று விசாரணைக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.
நடிகர் விவேக் ஏப்ரல் 15ம் தேதி கொரானா தடுப்பூசி போட்டுக கொண்டார். மற்றவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வரவேண்டும் என்று தான் தடுப்பூசிக கொண்டதை விளம்பரம் செய்தார் விவேக்.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக் அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கொரோனாவிலிருந்து நமது உயிரை காத்துக் கொள்ள முடியும் என்றார்.
தடுப்பூசி தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான அவசியத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அடுத்த நாள் மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் விவேக். அதற்கு அடுத்த நாள், ஏப்ரல் 17ம் தேதி அதிகாலை மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.
இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதனால் தான் அவர் உயிரிழந்ததாக தகவல் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால் விவேக் மரணமடைந்ததாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவ்ணன் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

No comments
Thank you for your comments