அரசு அமைப்பது குறித்து மூத்த தலிபான் தலைவர் பேச்சுவார்த்தை
காபூல் ;
ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்த அஷ்ரப் கனி வெளிநாட்டுக்கு சென்றது தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அதைப்பற்றிய தலிபான் தலைவர்கள் இப்பொழுது அஷ்ரப் கனி அரசியல் பொறுப்பு வகிக்க அவர்களுடன் புதிய அரசு அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக என குயெட்டாவில் இருந்து தலிபான் தலைவர் அமீர் கான் மொட்டாகி காபூல் நகருக்கு வந்துள்ளார். அமீர்கான் முன்னர் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆண்டபொழுது உயர் கல்வித் துறை அமைச்சராக பணியாற்றியவர். அதனால் ஆப்கானிஸ்தானத்தில் பற்றிய விவரங்கள் அவருக்கு நன்கு தெரியும். அதுதவிர ஆட்சியில் இருக்கும் பொழுதே பல அரசியல் தலைவர்களுடன் நேரடியாக தொடர்புகளை பராமரித்து வந்தவர் அமீர்கான். எனவே அவர் பேச்சுவார்த்தை நடத்துவது பொருத்தமாக இருக்கும் என்று தலிபான் அமைப்பு கருதுகிறது.
ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய். ஆப்கானிஸ்தான் தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் தலைவராக இருந்தவர் அப்துல்லா அப்துல்லா. இவர்கள் இருவரும் அஷ்ரப் கனியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தவர்கள். இப்பொழுது தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வேறு தலைவர்கள் யாரும் முன்வராத நிலையில் இவர்கள் இருவரும் தலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
திங்கட்கிழமை மாலை அமீர்கான் முதல் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரவு வெகு நேரமாகி விட்டது ஆனால் குறிப்பிடத்தக்க முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
இந்தப் பின்னணியில் இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை காலை இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையே துவங்கியிருக்கிறார்கள் பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது.
ஆப்கானிஸ்தானத்தில் அனைத்து பிரிவினரும் அங்கம் வகிக்கும் அரசாங்கம் அமைக்க வேண்டும் என்பதுதான் தலிபான் அமைப்பினர் நோக்கம் என தலிபான் அமைப்பின் பேச்சாளர் சுஹெய்ல் ஷாஹின் கூறினார். அந்த அடிப்படையில்தான் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
தலிபான் அமைப்பை சேர்ந்தவர்களுடன் நடந்து வரும் இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு இறுதி கட்டத்தை அடைந்தவுடன் அரசு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தலிபான் அமைப்பின் பேச்சாளர்சுஹெய்ல் ஷாஹின் கூறினார். ஆனால் பேச்சுவார்த்தை விவரங்கள் பற்றி சுஹெய்ல் ஷாஹின் எதுவும் கூறவில்லை.
ஆப்கானிஸ்தானில் அரசு அமைப்பது குறித்த முடிவு எடுக்கப்பட்டது உடனடியாக அரசு இயங்கத் தொடங்க வேண்டும் என்பதற்காகவே அஷரப் கனி அரசில் பணியாற்றிய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குவதாக தலிபான் அமைப்பின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
முந்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு வருகின்ற காரணத்தினால் அவர்கள் அனைவரும் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும் என்று தலிபான் அமைப்பின் சார்பில் செவ்வாய்க்கிழமை கூறப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் முழு நம்பிக்கையுடன் தங்கள் பணிகளை துவங்க வேண்டும் என்று தலிபான் அமைப்பின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
காபுல் நகரத்துக்குள் தலிபான் அமைப்பைச் சார்ந்தவர்கள் மட்டும் குறைந்திருப்பதாக கருத முடியாது. இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பைச் சேர்ந்த போராளிகளும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளும் தலிபான் அமைப்பின் வெள்ளைக் கொடியை கையில் ஏந்திக்கொண்டு காவல் நகரத்திற்குள் நுழைந்துள்ளனர் இவர்கள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று கருதப்படுகிறது.
நகரத்தில் நுழைந்த இவர்கள் தலிபான் அமைப்பின் கட்டுப்பாட்டின்கீழ் அங்கு செயல்படவில்லை. இந்த அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு என்று காபூல் நகரில் தனி பகுதியை தேர்வு செய்து அங்கு சென்று தங்கி உள்ளனர்.
மற்ற தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆயுதமேந்திய வீரர்களும் காபூல் நகரத்திற்குள் நுழைந்துள்ளனர் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வராமல் தனியாகவே காப்பகத்தில் தங்கி உள்ளனர் என்ற விவரம் தலிபான் அமைப்பின் தலைவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
தலிபான் அமைப்பினர் இருக்கும் காபூலில் உள்ள தலிபான் அமைப்பு சேராத தீவிரவாதிகளுக்கும் இதையே எத்தகைய உறவு உருவாகப் போகிறது என்பது அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் தெளிவாகிவிடும் அப்பொழுது தலிபான் அமைப்பின் செயல்பாடு குறித்து தெளிவான புரிந்துணர்வு கிடைக்கும்.
2020ஆம் ஆண்டு அமெரிக்க அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை தலிபான்கள் செய்துகொண்டுள்ளனர் இதன்படி வேறு எந்த பயங்கரவாத அமைப்பும் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக செயல்பட தலிபான்கள் அனுமதிக்கக்கூடாது என்று தலிபான் அமைப்பு சார்பில் அமெரிக்காவுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது இந்த உறுதியை தலிபான் அமைப்பினர் காப்பாற்றுவார்கள் அல்லது காற்றில் பறக்க விட்டு விடுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments
Thank you for your comments