Breaking News

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பதிவாளர்களின் பதிவுகள் நீக்கம்... அதிமுக வைகைசெல்வன் பேட்டி

காஞ்சிபுரம்:

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பதிவாளர்களின் பதிவுகள் நீக்கியுள்ளதற்கு  அதிமுக கண்டனம் தெரிவிப்பதாகவும்‌, மீண்டும் பதிவேற்ற வேண்டும் என அதிமுக செய்தி தொடர்பாளரும் இலக்கிய அணி மாநிலச் செயலாளருமான வைகைசெல்வன் காஞ்சிபுரத்தில் பேட்டி கூறியுள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இலக்கிய அணி சார்பாக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட இலக்கிய அணிசெயலாளர் பொன்.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வி சோமசுந்தரம் மற்றும் சிறப்பு அழைப்பாளராக கழக மாநில இலக்கிய அணி செயலாளரும் , கழக செய்தி தொடர்பாளருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைகைசெல்வன் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் செயல்பாடுகள் மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


இதன் பின் பேசிய வைகைச்செல்வன், இன்னும் ஓரிரு வருடங்களில் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் நிலையில் மீண்டும் அதிமுக ஆட்சியை கைப்பற்றும் எனவும் அதற்கான சாதகமான சூழ்நிலை தற்போது நிலவி வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பதிவாளர்களின் பதிப்புகள் இரவோடு இரவாக நீக்கப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவிப்பதாகவும் உடனடியாக அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

பள்ளிக்கல்வித் துறை சார்பாக வழங்கப்படும் 14 வகையான உபகரணங்களையும் முன்னாள் முதல்வரின் படம் இருந்தால் மட்டுமே தமிழக முதல்வரின் பெருந்தன்மையை காட்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நகர ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments