Breaking News

குடிசை மாற்று வாரியத்தில் கட்டப்பட்ட வீடுகளை வழங்குமாறு ஆட்சியரிடம் கோரிக்கை மனு

திருப்பூர், ஆக.19-

திருப்பூர் மாவட்டத்தில், தமிழக அரசால் குடிசை மாற்று வாரியத்தில் கட்டப்பட்ட வீடுகள் நெருப்பெருச்சல், அய்யம்பாளையம், அறிவொளி நகர், அவிநாசி, அண்ணா நகர் போன்ற ஊர்களில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.


தமிழக அரசால் குடிசை மாற்று வாரியத்தில் கட்டப்பட்ட வீடுகள் மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டோர்,  விதவைகள் மற்றும் சொந்த வீடில்லாமல் வாடகை வீட்டில், இடமில்லாமல் அரசு கால்வாய் போன்ற பகுதிகளில் குடிசை வீட்டில் குடியிருப்போருக்கு  இந்த வீடுகளில் வீடு வழங்கவேண்டும். 



ஆனால் இந்நாள் வரையில் வீடுகள் ஒதுக்கி தராததால்,  மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டோர்,  விதவைகள் மற்றும் சொந்த வீடில்லாமல் வாடகை வீட்டில், இடமில்லாமல் அரசு கால்வாய் போன்ற பகுதிகளில் குடிசை வீட்டில் குடியிருப்பவர்கள் ஒன்று இணைந்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தாங்களுக்கு வீடு வழங்குமாறு மனுக்களை வழங்கினார்கள்.

No comments

Thank you for your comments