ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை போராட்டம்..!
கடலூர், ஆக.19-
அருகேரி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அருகேரி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அருகேரி ஊராட்சி புதிய காலனி பகுதியில் குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோரி அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், எந்தவித நடவடிக்கை மேற்கொள்ளாததால், அருகேரி ஊராட்சி புதிய காலனி பகுதியில் குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும்,
தேசிய ஊரக வேலையில் நடைபெற்று வரும் முறைகேடுகளை கண்டித்தும்,
நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக பொருட்கள் வழங்காததை கண்டித்தும்,
ஊராட்சிக்கு சொந்தமான ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அருகேரி கிராம ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.
No comments
Thank you for your comments