Breaking News

மத நல்லிணக்க உறுதிமொழி

 தருமபுரி, ஆக.19-

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாளான ஆகஸ்டு 20ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



இதையொட்டி மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் கலந்துகொண்டு உறுதிமொழி வாசித்தார். அதாவது, நான் சாதி, இன, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுப்பூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன், மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளை பின்பற்றியும் தீர்த்துக்கொள்வேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

அவரை தொடர்ந்து, காவல் கூடுதல் கண்காணிப்பாளர் அண்ணாமலை காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் காவலர்கள் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

No comments

Thank you for your comments