போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வாகன வசூல் வேட்டையில் தீவிரம்....
தருமபுரி :
தருமபுரி நகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வாகன வசூல் வேட்டையில் தீவிரம்.... அபராதத் தொகையில் மோசடி செய்து வரும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஞானதின் மீது நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தருமபுரி நகரப்பகுதியில் முகக் கவசம் அணியாமலும் தலைக்கவசம் அணியாமலும் வருபவர்கள் மீது அபராத தொகை செலுத்தி வருகின்றனர். அபராதத் தொகை ரூ. 200 வசூலிக்கப்படுகிறது.
ஒரு ரசீதை காண்பித்து பல வாகன ஓட்டி இடம் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார் என்று வாகன ஓட்டிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேபோல் வாகனங்களை அனுமதிக்கப்படாத இடத்தில் நிறுத்தக்கூடாது என்று ஒவ்வொரு வண்டிக்கும் ரசீது இல்லாமல் 100 ரூபாய் வசூலித்து வருகிறார் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஞானதி ஒரு வருட காலமாக இந்த மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்றும்,
வாகன ஓட்டிகளிடம் கடுமையான வார்த்தைகளும் இழிவான வார்த்தைகளாலும் பேசி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து, இவர் மீது பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இந்நாள்வரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
தருமபுரி நகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஞானதி மீது மாவட்ட நிர்வாகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வலுக்கின்றது.
இந்த மாதிரி ஒரு சில காவல் அதிகாரிகளால் காவல்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் துறை ரீதியான நடவடிக்கை பாயுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
✒செய்தியாளர் : எம்.சுரேஷ்

No comments
Thank you for your comments