மனநலம் குன்றிய 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்...
தேன்கனிகோட்டை, ஆக.28-
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தரும திம்மனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாச ரெட்டி மகன் சுரேஷ் வயது 21 விவசாயியான இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த மனநலம் குன்றிய 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் சிறுமியை மீட்டனர். பின்னர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துமனையில் சிறுமியை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் சம்பூர்ணம் தீவிர விசாரணை மேற்கொண்டார, விசாரணையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து சுரேஷை போலீசார் கைதுசெய்துசிறையில் அடைத்தனர்.

No comments
Thank you for your comments