Breaking News

பழங்குடியின மக்களுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டை சிறப்பு முகாம்

விருத்தாசலம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் ஆணையின் பேரில், மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் உத்தரவின் பேரில் பழங்குடியின மக்களுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டை வழங்குவதற்கான விண்ணப்பம் பெறும் சிறப்பு முகாம் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில்  நடைபெற்றது.  இதில் வட்ட வழங்கல் அலுவலர் பூங்குழலி முன்னிலை வகித்தார்.


இந்த முகாமில் வட்டாட்சியர் சிவக்குமார் பேசியதாவது,   

"தமிழக அரசின் உத்தரவுபடி இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமில் கலந்த கொண்ட பழங்குடியின மக்களான நீங்கள் கொடுக்கும் புதிய ரேஷன் அட்டைக்கான விண்ணப்பத்தை நமது வட்ட வழங்கல் அலுவலர் பூங்குழலி அவர்கள் பரிசீலனை செய்து, இன்னும் 15 நாட்களுக்குள் புதிய ரேஷன் அட்டை பெறுவதற்கான அங்கீகாரத்தை வழங்க நடவடிக்கை எடுப்பார்" என்றார்.


இந்நிகழ்ச்சியில், வருவாய் ஆய்வாளர் பழனிவேல், கிராம நிர்வாக அலுவலர் மாயக்கண்ணன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜதுரை, இளநிலை வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் செந்தமிழ்வளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு முகாமில் சுமார் 75-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

No comments

Thank you for your comments