வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளி கைது... தங்க நகைகள் மீட்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் உட்கோட்டம், சாலவாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சங்கராபுரம், பள்ளத்தெருவைச் சேர்ந்த கொலக்கியம்மாள ( 57 ), க/பெ.பெருமாள் என்பவர் 27.08.2021 அன்று 17.00 மணிக்கு சங்கராபுரம், இரயில்வே கேட் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் மேற்படி கொலக்கியம்மாவை கீழே தள்ளிவிட்டு அவரது வலது காதில் அணிந்திருந்த கம்மல் மற்றும் முக்கில் அணிந்திருந்த முக்குத்தி ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து, சாலவாக்கம் காவல் நிலையத்தில் 29.08.2021 அன்று கொலக்கியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கினை துரிதமாக விசாரணை மேற்கொண்டு எதிரியை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் உத்தரவிட்டதின் பேரில், உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தீவிர விசாரணையில் உள்ளாவூரைச் சேர்ந்த தமிழ்மணி(34), த/பெ.தெய்வசிகாமணி என்பவர் மேற்படி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து தமிழ்மணியை கைது செய்து அவரிடமிருந்து களவு நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
வழக்கு பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் எதிரியை கைது செய்த தனிப்படையினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.
✒ செய்தியாளர் E. ஜாபர்

No comments
Thank you for your comments