Breaking News

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அகாடமியில் தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி - தலா ரூ.3 லட்சம் கடனுதவி

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அகாடமியில்  மகளிர் குழுவை சார்ந்த பெண் தொழில் முனைவோர்களுக்கான 4 நாள் பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தொழில் முனைவோருக்கு தலா  ரூ.3 லட்சம்  கடனுதவியை ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அகாடமி  இயக்குநர் சந்திரசேகர் வழங்கினார்.

பட விளக்கம் - காஞ்சிபுரம் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அகாடமியில் நடைபெற்ற மகளிர் குழுவை சார்ந்த பெண் தொழில் முனைவோர்களுக்கான 4 நாள் பயிற்சி  நிறைவு நிகழ்ச்சியில்  தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தொழில் முனைவோருக்கு ரூ.3 லட்சம்  கடனுதவிக்கான ஆணைய கடிதத்தை ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அகாடமி  இயக்குநர் சந்திரசேகர் வழங்கினார். உடன்  பாரதிய யுவசக்தி அறக்கட்டளை ( BYST) அன்பழகன்,தேசிய சிறுதொழில் கழகம்   ( NSIC ) அருள்பிரகாஷ்  உள்ளிட்டோர் உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  மகளிர் குழுவை சார்ந்த பெண் தொழில் முனைவோர்களுக்கு ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா, பெல்ஸ்டார் அமைப்பு மற்றும் சிறு தொழில் மேம்பாட்டு இந்தியா நிறுவனம் (SIDBI) இனைந்து 4 நாட்கள் பயிற்சி ஏற்பாடு செய்தனர்.  ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியாவின்  நிர்வாகத் தலைவர் டாக்டர்  கல்பனா சங்கர் அவர்களின் ஆலோசனைப்படி  காஞ்சிபுரம் களியனூர் பகுதியிலுள்ள ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா  அகாடமியில்  நடைபெற்றது. 

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை  மேலாளர் A. ராமசாமி வரவேற்றார். காஞ்சிபுரம் மாவட்ட அரசு  தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளர் டாக்டர். கல்பனா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இப் பயிற்சியினை துவங்கி வைத்தார்.

இதில்   64 பெண் தொழில்முனைவோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெல்ஸ்டார் மண்டல மேலாளர் பகவதி   மகளிர் குழுவை சார்ந்த பெண்களில்  தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு பெல்ஸ்டார் சார்பில் வழங்கப்படும்  கடனுதவி பற்றி விளக்கினார். 

மேலும் மகளிர் தொழில் செய்வதற்கான  ஆலோசனைகளை வழங்கிட  ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனம் தயாராக இருக்கிறது என்றும்  சிறப்பாக தொழில் செய்யும் மகளிருக்கு அதிக கடன் வழங்கிட பெல்ஸ்டார் நிறுவனம் தயாராக உள்ளது என்றும் அதிக தொழில்முனைவோரை உருவாக்கி அவர்களின் பொருளாதார  முன்னேற்றத்தை உயர்த்துவதே  இந்த பயிற்சியின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும் மாதம் மற்றும் வருடம் வரவு செலவுத் திட்ட  துணை பொது மேலாளர் ராபர்ட் ,  தொழில் பதிவு மற்றும் லைசென்ஸ் விஜய், டிட்டு ராஜா ஸ்டீபன்சன் ஆகியோர்  சமுக ஊடகங்கள் மூலம் தொழில் மேம்பாடுகள் குறித்தும்  விக்னேஸ்ராஜா சந்தை ஆய்வு பற்றியும்  பயிற்சி அளித்தனர்.

இந்த  4 நாள் பயிற்சியில்  தொழில் முனைவோருக்கான  வாடிக்கையாளர் வர்த்தக உறவை மேம்படுத்துதல், செய்யும் தொழிலில் ஏற்படும் சவால்களை சமாளித்தல், வலைதளங்களின் மூலம் விளம்பரங்கள் செய்வது, வர்த்தகப் பரிமாற்றம்  செய்தல், வலைத்தளங்களின் மூலம் வியாபார விளம்பரங்கள் செய்தல், வர்த்தக உறவுகளை பெருக்குதல், டிஜிட்டல் மார்க்கெட்டிங் செயலி பயன்பாடு ஆகியவை குறித்தும் தொழில்  முனைவோர் கடைபிடிக்க வேண்டிய நேர மேலாண்மை ஆகியவற்றைப் பற்றியும்   பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த 4 நாள் பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில்   காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா  சிறப்புரையாற்றியும்,ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அகாடமி இயக்குநர்  சந்திரசேகர், தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தொழில் முனைவோர்களுக்கு ரூ.3 லட்சம்  கடனுதவியை வழங்கி  தலைமை உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொழில் மேம்பாட்டுப்பிரிவு பயிற்சியாளர்  சி.கா.ஸ்வப்னா, ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மேலாளர் பிரபாவதி மற்றும், ஜோசப்,  ராமசாமி, சித்ரா,  ஸ்வப்னா  உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

✒ செய்தியாளர் E. ஜாபர் 

No comments

Thank you for your comments