விசிக கொடி கம்பம் அகற்ற முயற்சி... நிர்வாகிகள் தடுத்து நிறுத்தம்... சார் ஆட்சியர் சமாதான பேச்சுவார்த்தை
கடலூர்:
விசிக கொடி கம்பம் அகற்ற காவல்துறையினர் தீவிரம் விசிக நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சார் ஆட்சியர் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆகஸ்ட் 17 எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் ஏற்றப்பட்டது.
இதனை காவல்துறையினர் அகற்றுவதற்கு ஏற்பாடு செய்து வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து அகற்ற விடாமல் தடுத்து நிறுத்தினர். அதன் தொடர்ச்சியாக விருத்தாசலம் சார் ஆட்சியர் அமித்குமார் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தை கூட்டத்தில் வட்டாட்சியர் சிவகுமார், காவல்துறை கண்காணிப்பாளர் மோகன், விருத்தாசலம் காவல் ஆய்வாளர் விஜயரங்கன், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மாவட்ட துணை செயலாளர் திராவிடமணி, விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி செயலாளர் ஐய்யாயிரம், முற்போக்கு மாணவர் கழக மாநில துணை செயலாளர் நீதிவள்ளல், தொகுதி துணை செயலாளர் சத்யவடி பாஸ்கர், விருத்தாசலம் நகர செயலாளர் முருகன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பூக்கடை ரவி, விருத்தாசலம் தெற்கு ஒன்றிய செயலாளர் திருஞானம், ஒன்றிய துணை செயலாளர்,தென்றல் ஒன்றிய பொருளாளர் ஸ்டுடியோ சக்திவேல் ராஜேந்திரபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சடையன் பெயரன், ராமதாசு வேலாசுந்தர் அய்யாதுரை, கம்மாபுரம் முன்னாள் ஒன்றிய செயலாளர் சாமிதுரை, ஒன்றிய துணை செயலாளர் சாத்துக்குடல் பாஸ்கர், கம்மாபுரம் ஒன்றிய துணை செயலாளர் சிறுவரப்பூர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியினை அந்த இடத்தில் இருந்து அகற்ற மாட்டோம் அப்படி அகற்றும் பட்சத்தில் கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் எந்த ஒரு அரசியல் கட்சிக் கொடிகளும் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் விடுதலை சிறுத்தை கட்சி கொடியையும் அங்கே தான் இருக்கும் என அரசு அதிகாரிகள் இடத்தில் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் கருவேப்பிலங்குறிச்சி முகாம் செயலாளர் அவரது சொந்த இடத்தில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதை அகற்றுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட சார் ஆட்சியர் அமித்குமார் ஓரிரு நாட்களில் நேரில் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதியோடு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்
No comments
Thank you for your comments