Breaking News

உச்சநீதிமன்ற குழு பரிந்துரைத்த 9 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட அரசு ஒப்புதல்

புதுடெல்லி :

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தேர்வு குழு பரிந்துரைத்த 8 நீதிபதிகள் மற்றும் ஒரு உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது.


கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு தனது பரிந்துரையை வழங்கியது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியவர்களின் பெயர்கள் விவரம்:

1.கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ எஸ் ஓகா, 

2.குஜராத் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், 

3.குஜராத் மாநில உயர் நீதிமன்ற நீதிபதி பேலா எம்.திரிவேதி, 

4.சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜேகே மகேஸ்வரி,

5.தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி,

6. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகரத்னா,

7.கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சிடி ரவிக்குமார்,

8.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம் எம் சுந்தரேஷ்,

9.உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா.

மத்திய அரசின் பரிந்துரை களோடு இந்த ஒன்பது பேரின் பட்டியலும் குடியரசுத்தலைவர் அலுவலகத்திற்கு நியமன ஆணை பிறப்பிக்கப்பட அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் ஒன்பது பேரும் பதவியேற்க வாய்ப்பு உள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு 3 பேரை உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை வழங்கியுள்ளது.

இந்த மூன்று பேரில் கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி நாகரத்னா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு நீதிபதி நாகரத்தினம் நியமிக்கப்பட்டார் இந்திய உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை பெண் நீதிபதியாக அவர்  வாய்ப்பு பெறுவார்.

No comments

Thank you for your comments