Breaking News

வட்டாட்சியரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்...!

திட்டக்குடி: 

அம்பேத்கர் பெரியார் போட்டோ அவமதிப்பு மற்றும் ஆதிதிராவிட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத வட்டாட்சியரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. 


கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி மற்றும் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக திட்டக்குடி வட்டாட்சியரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொளார் செங்கமேடு கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் பொதுமக்களின் பல ஆண்டு கால கோரிக்கைகளையும், போராட்டங்களையும்  காது கொடுத்து கேட்காமல் ஆதிதிராவிடர் பொதுமக்களின் வாழ்க்கைத்தானே என்ற அடிப்படையில் மெத்தனமாகவும்,  அலட்சியமாகவும் செயல்பட்டு வருவதை கண்டித்தும்; 

வட்டாட்சியராக பொறுப்பேற்ற நாள் முதல் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது எந்த வித  நடவெடிக்கைகள் எடுக்கப்படாததை கண்டித்தும் ;

வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களை அவமதிக்கும் வகையில் அவர்களின் புகைப்பட போட்டோவை ஒரு ஓரமாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள திட்டக்குடி வட்டாட்சியரை கண்டித்து திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 மேலும் எந்தவித பணிகளும் செய்யாமல் வீணாக வட்டாட்சியர் பதவி வகிக்க கூடிய திட்டக்குடி வட்டாட்சியரை உடனடியாக திட்டக்குடியில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மற்றும் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கம் தலைவர் தயா.பேரின்பம் தலைமையேற்று கண்டன உரையாற்றினார்

நல்லூர் ஒன்றிய செயலாளர் இராஜமாணிக்கம் வரவேற்புரை வழங்கினார். பாண்டிரெங்கன் பொருளாளர்,  முருகானந்தம் மாநில துணை பொது செயலாளர், வீரராஜன் மாவட்ட செயலாளர், முனியமுத்து மானாவாரி விவசாயிகள் பிரிவு மாவட்ட செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

No comments

Thank you for your comments