Breaking News

உள்கட்டமைப்பு வசதிகளை பணமாக்கும் திட்டத்திற்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு தொழிற்சங்கம் எதிர்ப்பு

புதுடெல்லி, ஆக.26-

இந்தியாவில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு பணம் ஒட்டுமொத்தமாக சம்பாதிக்க மத்திய அரசு தேசிய மானிட்டைசேஷன் பைப்லைன் என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்கள்.

நான்காண்டு காலத்தில் இந்த திட்டத்தின் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு ஈட்ட முடியும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த திட்டத்தை ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு மிகவும் நெருக்கமான பாரதிய மஸ்தூர் சங் என்ற தொழிற்சங்க அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஏழைக் குடும்பங்கள் தங்கள் குடும்பச் சொத்தாக சிறுசிறு நகைகள் வைத்திருப்பது வழக்கம் இந்தச் சிறு நகைகளை அவர்கள் ஒருபோதும் விற்க சம்மதிக்க மாட்டார்கள் அதுபோல குடும்பச் சொத்தாக இருக்கிற இந்திய உள்கட்டமைப்பு வசதிகளில் விற்க மத்திய அரசு இப்பொழுது முன் வந்திருக்கிறது. 

மத்திய அரசுக்கு பணத்தேவை இருக்கலாம். ஆனால் பணம் சம்பாதிப்பதற்கு மாற்றுத் திட்டங்களை வகுத்து அமல் செய்ய வேண்டும்... அதைவிடுத்து குடும்பச் சொத்தாக விளங்குகிற உள்கட்டமைப்பு வசதிகளை விற்க கூடாது என்று பாரதிய மஸ்தூர் சங்கம் பொதுச்செயலாளர் பினய் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தனியார் மயமாக்கும் திட்டங்களை எதிர்த்து ஏற்கனவே செப்டம்பர் மாதத்தில் அகில இந்திய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த பாரதிய மஸ்தூர் சங்கம் தீர்மானித்துள்ளது. 

இப்பொழுது மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ள உள்கட்டமைப்பு வசதிகளைத் தனியாருக்கு விற்கும் திட்டத்தையும் எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்புவோம் என பினய் குமார் சின்ஹா  கூறினார்.

உள்கட்டமைப்பு வசதிகளைத் தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்திற்கு பல மத்திய தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

No comments

Thank you for your comments